இரண்டு டாக்சிகள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டதில் ஒரு டாக்சி வீவக அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளம் வரை சென்றுவிட்டது. தோ பாயோ சென்ட்ரலில் உள்ள ஒரு சிறிய சாலையில் இரு வாகனங்களுக் கிடையே விபத்து நிகழ்ந்துள்ளது குறித்து நண்பகல் நேரத்தில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். டிரான்ஸ்கேப் டாக்சி ஒன்றும் கம்ஃபர்ட் டாக்சி ஒன்றும் சம்பவ இடத்தில் காணப்பட்டதை ஊடகங்களில் வலம் வந்த படங் களும் காணொளிக் காட்சிகளும் சித்திரித்தன. டிரான்ஸ்கேப் டாக்சி பின்னா லிருந்து மோதியதில் கம்ஃபர்ட் டாக்சி மக்கள் நடைபாதை மீது சென்று தோ பாயோ லோரோங் 2ல் உள்ள புளோக் 175 கீழ்த் தளத்தின் தூணை இடித்து நின்றது. இரு டாக்சி ஓட்டுநர்களில் ஒருவரான 62 வயது ஆடவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிசார் கூறினர். அத்துடன் சம்பவ இடத்தருகே இருந்த மூன்று பேரங்காடி தள்ளு வண்டிகளும் சேதமடைந்ததாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.
தள்ளாடிய டாக்சி கட்டடத் தூணை இடித்தது
1 mins read
நடைபாதை மீது ஏறிய கம்ஃபர்ட் டாக்சி அடுக்குமாடியின் கீழ்த்தளத்தில் இருந்த தூணில் மோதி நின்றது. படம்: ஷின் மின் வாசகர் -

