930,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

930,000 குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

1 mins read
53883efc-70e3-49c3-82b4-f6fac479ffe1
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 930,000 குடும்பங்கள், தங்களது பயனீட்டுக் கட்டணச் செலவுகளை ஈடுகட்டுவதற்காகப் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுகளை இம்மாதம் பெறுகின்றன. இந்தக் குடும்பங்கள் 100 வெள்ளி வரையிலான 'யூ-சேவ்' தள்ளுபடியை இந்தக் காலாண்டில் பெறுவர் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கட்டணத் தள்ளுபடி, அவர்கள் இருக்கும் வீட்டைப் பொறுத்து வேறுபடும். ஓரறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 100 வெள்ளி மதிப்புடைய பற்றுச்சீட்டு வழங்கப்படும். மூன்று அறை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கு 90 வெள்ளி மதிப்புடைய பற்றுச்சீட்டு வழங்கப்படும். நான்கறை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கு 80 வெள்ளி மதிக்கத்தக்க பற்றுச்சீட்டும் ஐந்தறை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கு 70 வெள்ளி மதிப்புடைய பற்றுச்சீட்டும் கொடுக்கப்படும். எக்சிகியூட்டிவ் வீடுகளில் இருப்போருக்கு 60 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு தரப்படும். நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த 'யூ-சேவ்' தள்ளுபடி, ஒட்டுமொத்த வீட்டுச் செலவுகளைக் குறைப்பதற் காக வழங்கப்படுகிறது.