உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களைக் கட்டுவதற்காக 9 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களைக் கட்டுவதற்காக 9 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்

1 mins read
bf8940d2-2112-449a-a16c-63043eeb07e5
-

சிங்கப்பூரிலுள்ள இரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களைக் கட்டுவதற்காக 9 பில்லியன் வெள்ளியைச் செலவிட உள்ளனர். மரினா பே சேண்ட்ஸின் வளாகத்தில் நான்காவது கோபுரம், மூன்று புதிய ஹோட்டல்கள், 15,000 இருக்கைகள் கொண்ட கேளிக்கை இடம், யூஎஸ்எஸ் சிங்கப்பூருக்கு மேம்பாடுகள் ஆகியவற்றை உள்ளடங்கிய திட்டங்களுக்கு இந்தப் பணம் செலவிடப்படும்.

பிரச்சினைமிக்க சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் வாசிகளுக்கு உரிய சூதாட்ட கூட தீர்வைகள் வியாழக்கிழமை ( ஏப்ரல் 4) முதல் 100 வெள்ளியிலிருந்து 150 வெள்ளிக்கு உயர்த்தப்படும். வருடாந்திர தீர்வை 2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.

வர்த்தக, தொழில்துறை அமைச்சு இந்த மாற்றங்களை புதன்கிழமை மாலை அறிவித்தது.