மரினா பே சேண்ட்ஸ் மேம்பாட்டுக்கு $9 பில்லியன்

மரினா பே சேண்ட்சில் (எம்பிஎஸ்) நான்காவது கோபுரம், மூன்று ஹோட்டல்கள், 15,000 பேர் அமரக்கூடிய பொழுதுபோக்கு அரங்கு அமைப்பது, சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோசின் (யுஎஸ்எஸ்) விரிவாக்கம் ஆகியவற்றுக்காக இவ்விரு ஒருங்கிணைந்த வளாகங்களும் $9 பில்லியன் செலவிடத் திட்டமிட்டுள்ளன. 
இதற்கிடையே, எம்பிஎஸ், ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா (ஆர்டபிள்யூஎஸ்) ஆகிய இரண்டும் 2030ஆம் ஆண்டு வரை இங்கு சூதாட்ட நடவடிக்கைகளை விரிவுபடுத் தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவற்றின் சூதாட்ட வருமானத்துக்கான அரசாங்க வரி அதிகரிக்கும். சிங்கப்பூரர்களின் சூதாட்டப் பழக்கத்துக்கு கடிவாளமிடும் நோக்கில் சிங்கப்பூர் குடியிருப் பாளர்கள் மீதான தீர்வையும் அதிகரிக்கப்படும்.
இன்று முதல் சூதாட்டக் கூடத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் மீதான தினசரி தீர்வை $100 லிருந்து $150 ஆகவும் வருடாந்திர தீர்வை $2,000 லிருந்து $3,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.
நேற்று மாலை வெளியான வர்த்தக, தொழில்துறை அமைச்சு உட்பட அதிகாரிகளின் கூட்டு அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றன. 
குறிப்பிடத்தக்க அளவிலான இந்த முதலீடு, வர்த்தகத்தில் நிச்சயத் தன்மையை வழங்குதல் போன்றவற்றுக்காக இவ்விரு சூதாட்டக் கூடங்களுக் கான தனிப்பட்ட செயல்பாட்டு அனுமதி 2030ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டது.
செந்தோசாவில் மினியன் பார்க், சூப்பர் நின்டெண்டோ வோர்ல்ட் எனும் இரண்டு புதிய பகுதிகள் யுஎஸ்எஸ்-ல் உருவாக் கப்படும். S.E.A. Aquarium தற்போ திருப்பதைவிட மூன்று மடங்கு பெரியதாக விரிவுபடுத்தப்படும்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon