ஓங்: உங்கள் விருப்பத்தை அறிந்து செயல்படுங்கள்

ஓங்: உங்கள் விருப்பத்தை அறிந்து செயல்படுங்கள்

1 mins read
e5ee1719-9977-4fdd-8aa7-04a0a9951622
கல்வி அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் - திமத்தி டேவிட் -

நகர வாழ்க்கை தொடர்பான வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காக பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு 'ஃபியூச்சர் சிட்டி' என்னும் திட்டத் தின் கீழ் வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் மாணவர் கள் தங்களின் விருப்பங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று நீ ஆன் பலதுறை தொழிற் கல்லூரி யில் நேற்று நடைபெற்ற கல்வி, வாழ்க்கைத் தொழில் வழி காட்டல் கருத்தரங்கின்போது கல்வி அமைச்சர் ஓங் யி காங் குறிப் பிட்டார். நாட்டின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களையும் இத்திட்டம் இணைப்பதுடன் கல் வித்துறை, தொழில்துறை பங்காளி கள், அரசு அமைப்புகள் ஆகியோரு டன் உள்கட்டமைப்பு, சமூக மேம் பாடு போன்றவற்றின் தொடர்பில் சேர்ந்து செயல்பட இத்திட்டம் கை கொடுக்கும். தற்போது பலதுறைத் தொழிற் கல்லூரிகளில் வேலை அனுபவத் திட்டங்கள் இருந்து வந்தாலும், 'ஃபியூச்சர் சிட்டி' திட்டம் குறிப் பாக பொறியியல், தகவல் தொழில் நுட்பம், வடிவமைப்பு போன்ற துறைகளில் நாட்டம் செலுத்தும். ஒருங்கிணைந்த முறையில் அனைத்து பலதுறைத் தொழிற் கல்லூரிகளும் இயங்குவதன் வழி புதிய வாய்ப்புகள் பற்றிய விழிப் புணர்வை இத்திட்டம் ஏற்படுத்தும் என்றும் இம்மூன்று குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளை அமைத்துக்கொள்வதை ஊக்கு விக்கும் என்றும் திட்டத்திற்குத் தலைமை அதிகாரியான திரு ரசல் சான் கூறினார். கற்றல் பயணங்கள், வேலை அனுபவங்கள், வழிகாட்டல் திட் டங்கள் போன்றவை மூலம் எதிர் கால நகரத்தை உருவாக்கும் திட் டங்கள் தொடர்பில் மாணவர்கள் துறை பங்காளிகளுடன் தொடர்பு கள் ஏற்படுத்திக்கொள்ளலாம்.