இவ்வாண்டு இறுதிக்குள் வயிற் றுப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவும் புதிய ரத்த பரிசோதனை சாத்தியமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்குமானால், வயிற்றுப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க உலகில் முதன்முதலாக மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனை இதுவாக இருக்கும் என்று இந்தத் திட்டத்தை முன் னெடுக்கும் உள்ளூர் நிபுணர் கருத்துக் கூறியுள்ளார். "வயிற்றுப் புற்றுநோய் ஓர் அமைதியான உயிர்க்கொல்லி நோய். ஏனெனில் இது பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. இத னால், இதற்கு சிகிச்சை வழங்கி குணப்படுத்துவது சிரமமான ஒன்று. "உடலில் அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல் ரத்த பரிசோதனை மூலம் இந்த நோயைக் கண்பிடிக்க முடிந்தால் இதற்கான சிகிச்சையை நோயின் ஆரம்பகட்டத்திலேயே அளிக்க முடியும். "தற்போதைய நிலையில் வயிற் றுப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க நம்பகமான ரத்த பரிசோதனை முறை இல்லை," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் இயோ கே குவான் கருத்துக் கூறினார். இந்த ரத்த பரிசோதனை மூலம் மனித உடல்களில் உள்ள மர பணுக்களை ஒழுங்குபடுத்தும் 'மைக்ரோ-ஆர்என்ஏ' அளவை கணக்கிடலாம்.
'வயிற்றுப் புற்றுநோய்க்கான புதிய ரத்த பரிசோதனை சாத்தியமாகலாம்'
1 mins read
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் இயோ கே குவான் -

