கனிவுடைமை கருப்பொருளில் எம்ஆர்டி ரயில் வண்டிகள்

பயணிகள் பொதுப் போக்குவரத் தில் கனிவுடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் இவ்வாண்டுக்கான கனிவுடைமை இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தது.
பயணிகள் பேருந்துகளிலும் ரயில்வண்டிகளிலும் கனிவாக நடந்துகொள்ள “நீங்கள் காட்டும் அக்கறை உங்களை ஒரு நட்சத் திரம் ஆக்குகிறது” என்ற குறிப்பு தாங்கியவாறு ஆறு ரயில்வண்டி கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
“உள்கட்டமைப்போ வடி வமைப்போ, இறுதியில் பயணி களின் அனுபவமே மிக முக்கியம். அக்கறை காட்டுவதால் சிறந்த அனுபவம் சாத்தியமாகும்,”  என்று இயக்கத்தைத் தொடங்கி வைத் துப் பேசிய போக்குவரத்து அமைச் சின் மூத்த நாடாளுமன்றச் செய லாளர் பே யாம் கெங் சுட்டினார்.
இயக்கம் தொடர்பில் நிலப் போக்குவரத்து ஆணையம் பல் வேறு பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 
அதிலும் குறிப்பாக பயணங் களின்போது உதவி தேவைப்படு வோரைக் கருத்தில் கொண்டு அக்கறை காட்டுமாறு பொது மக்கள் ஊக்குவிக்கப்படுகின் றனர்.
இருக்கைகளை விட்டுக் கொடுப்பது, வரிசையில் நிற்பது, உள்ளே நகர்ந்து சென்று பிறர் ஏற வழி விடுவது போன்ற செயல் களைப் பொதுப் போக்குவரத்தில் ஊக்குவிக்க கனிவுடைமை இயக்கம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon