‘இறுதி முடிவெடுக்கும் உரிமை நீதிமன்றத்துக்கே உள்ளது’ 

கண்ணிமைக்கும் நேரத்தில் இணையத்தில் வேகமாகப் பரவும் பொய்ச் செய்திகள் எதிராக முதல் கட்டத்தில் முடிவெடுக்கக் கூடிய நிலையில் அரசு உள்ளது. ஆனால் எது உண்மை, எது பொய் என்று  இறுதி முடிவை எடுக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கே இருப்பதாக நேற்று முன்தினம் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறினார்.
இணையத்தில் பொய்த் தகவல் களைப் பரப்புவது தொடர்பில் நகல் சட்டம் உருவாக்கப்பட்டதன் தொடர்பில் அமைச்சர் பேசியபோது, அச்சட்டம் விமர்சனங்கள், கருத்து கள், நையாண்டிப்பேச்சு, கேலி ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். தவறான தக வல்களைத் தொகுத்து அளிப்பது அச்சட்டத்தின் கீழ் தற்போது சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. 
பொய்ச் செய்தியிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாக்கும் வகையில் பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் வெளியிடப் படும் செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம் நடப்புக்கு வரும் என்று திங்கட்கிழமை நாடாளுமன் றத்தில் அறிவிக்கப்பட்டது.
பிறருக்குத் தீங்கு விளைவிக் கக்கூடிய பொய்ச் செய்திகளை வேண்டுமென்றே பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் செய்தியைத் திருத்தி வெளியிடவும் அதை முழுமையாக அகற்றவும் உத்தர விடும் உரிமை அமைச்சர்களுக்குத் தரப்படும். இப்புதிய சட்டத்தால் உண்மை எது என்று முடிவெடுக்கும் உரிமை அரசாங்கத்தைச் சார்ந்து விடுவதாக சர்ச்சை ஏற்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon