மனச்சிதைவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர் தனக்கு ஊட்டப்பட்ட உணவில் திணறி அதன்பின் தொடர்ந்து உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் $5 மில்லியன் கோரி மனநல மருத்துவமனை மீது வழக்கு தொடுத்துள்ளனர். அலட்சிய போக்கு குறித்துத் தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நிபுணர்களின் கருத்துகளைப் பெற மருத்துவமனை முனைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உணவு ஊட்டப்பட்டு பின் உணர்விழந்த நிலைக்கு ஆளான திரு செங் ஜியா நிங், 59, தாதிமை இல்லத்தில் அதே ஆண்டின் ஜூன் மாதம் முதல் இருந்து வருகிறார். திரு செங்குக்கு அளிக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பு தரநிலை குறித்து திரு செங்கின் குடும்பத்தார் வழக்கு தொடுத்துள்ள நிலையில் அப்பராமரிப்பு சரியான தரமுடையதுதான் என்று மருத்துவமனை கூறி மறுத்துள்ளது.
அலட்சிய போக்குக்காக மனநல மருத்துவமனை மீது $5 மி. வழக்கு
1 mins read

