உயிர்க்காப்பாளர்களின் கவனச் சிதறலால் ஆறு வயது சிறுமி மரணம்

உயிர்க்காப்பாளர்களின் கவனச் சிதறலால் ஆறு வயது சிறுமி மரணம்

1 mins read

தண்ணீரில் தானாக மிதக்கவோ நீந்தவோ தெரியாத ஆறு வயது சிறுமியைத் தனியே நீச்சல் குளத்தில் விட்டதற்காக இரு உயிர்க்காப்பாளர்களையும் நீச்சல் பயிற்றுவிப் பாளரையும் மரண விசாரணை அதிகாரி கண்டித்துள்ளார். காலாங் பேசின் நீச்சல் குளத் தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியன்று சிறுமி ஷெர்லின் லேர் குறைந்தது நான்கு நிமிடங்களுக்குத் தனியே விடப்பட்டார். நீச்சல் வகுப்பின்போது நீச்சல் குளத்தின் நடுப்பகுதி வரை சிறுமியை அழைத்துச் சென்றார் பயிற்றுவிப்பாளர் திரு யோ சுவீ சுவான். பின்னர், நீச்சல் குளத்தின் ஓரத்திற்குச் சிறுமியை அவராகவே நீந்தச் சொன்ன யோ, தன் நாட்டத்தை மற்ற மாணவர்கள் பக்கம் திருப்பினார். அருகிலிருந்த இரு உயிர்க்காப்பாளர்களில் ஒருவர் தன் கைபேசியிலும் மற்றொருவர் நாற்காலிகளை அடுக்கி வைப்பதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தியவாறு இருந்தனர். நீருக்கடியில் சென்று பின்னர் மேல்நோக்கியபடி மிதந்தார் ஷெர்லின். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சென்ற ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியன்று உயிரிழந்தார்.