விடுமுறைக்காக வியட்னாமுக்குச் சென்றிருந்த சிங்கப்பூர்ப் பெண் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
மதுபோதையால் தன்னிலை மறந்த அந்தப் பெண் ஹோட்டல் அறை ஒன்றில் இருந்தபோது ஹோட்டல் நிர்வாகி ஒருவர் அவரை பலாத்காரம் செய்ததாகத் தெரிய வந்தது.
அந்த 30 வயது பெண், தமது தோழியுடன் தெற்கு வியட்னாமிலுள்ள பின் துவான் மாநிலத்திற்குச் சென்றனர். பான் தியேட் நகரின் கடற்கரையோர உல்லாச விடுதியில் அவவ்விருவரும் தங்கினர்.
வியட்னாமிய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது அந்தப் பெண்ணின் தோழி எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை.

