கார் விற்பவர்களுக்கான புதிய இணையத்தளம்

கார் விற்பவர்களுக்கான புதிய இணையத்தளம்

1 mins read
cdd01ef0-8557-4911-8672-361be6e54bce
-

கார் விற்பனை இணையத்தளங்கள் கொடுக்கும் கடும்போட்டிக்கு ஈடுகொடுக்க கார் விற்பவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து புதிய இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 'யூகார்ஸ்' என்ற அந்த இணையத்தளம் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரிலுள்ள 40 கார் விற்பனையாளர்கள் ஒன்றுசேர்ந்துள்ள '21 யுனைட்டட் ஹோல்டிங்ஸ்' என்ற சம்மேளனம் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளது. இதற்குத் தேவைப்படும் ஐந்து மில்லியன் வெள்ளியைத் திரட்ட சம்மேளன உறுப்பினர்கள் முயன்று வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பல உயர்தரச் சேவைகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக '21 யுனைட்டட் ஹோல்டிங்ஸ்' கூறியது. காரை விற்பவர் இவ்வாண்டு இந்த இணையத்தளத்தில் விற்பனையைத் தொடங்கலாம்.