சிங்கப்பூர் பெண் வியட்னாமில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார்

விடுமுறைக்காக வியட்னாம் சென்ற சிங்கப்பூர் பெண் ஒருவர் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணை அவர் தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அறியப்படுகிறது.
அந்த மேலாளர் ஹோட்டல் முதலாளியின் மகன் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பெயரை வியட்னாமிய அதிகாரிகள் வெளியிடவில்லை.
அந்தப் பெண் தனது தோழி யுடன் தென்வியட்னாமில் உள்ள பான் தியேட் எனும் கடலோர நகருக்குச் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் சென்றிருந்தார். 
இருவரும் ஹோட்டல் மேலாள ருடன் இரவு சாப்பாட்டுக்காக வெளியே சென்றனர்.
ஹோட்டலுக்குத் திரும்பி வந்தபோது அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அன்றிரவு அந்தப் பெண் தங்கியிருந்த அறைக்குள் அந்த மேலாளர் நுழைந்து அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப் பெண்ணின் தோழி எங்கு இருந்தார் என்று தெரிவிக்கப்படவில்லை.
ஹோட்டல் மேலாளர் தம்மைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்தப் பெண் வியட்னாமிய போலிசாரிடம் புகார் செய்துள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon