காப்பிக்கடையில் சண்டை; இருவர் காயம், ஒருவர் கைது

காப்பிக்கடையில் சண்டை; இருவர் காயம், ஒருவர் கைது

1 mins read

கேலாங் லோரோங் 25Aல் உள்ள காப்பிக்கடையில் நேற்று முன்தினம் சண்டை மூண்டது. சண்டையில் காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் சென்ற போது இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு வயது 51, 53. ஆயுதத்தைப் பயன்படுத்தி காயம் விளைவித்த குற்றத்துக்காக 51 வயது ஆடவர் கைது செய்யப் பட்டுள்ளார். சண்டைக்குப் பின் அவரை மூன்று பேர் மடக்கிப் பிடிப்பதைக் காட்டும் காணொளி 'ஸ்டோம்ப்' இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒருவரது முகத்தில் இருந்த வெட்டுக்காயத்திலிருந்து ரத்தம் வடிவதை அந்தக் காணொளியில் காண முடிந்தது. சண்டையில் ஒருவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற் பட்டது. இன்னொருவருக்கு வலது காதிலிருந்து கன்னம் வரை ஆழமான வெட்டு ஏற்பட்டது. 2019-04-05 06:00:00 +0800 திரும்பிச் சென்ற 50 மலேசிய கார்கள் போக்குவரத்து அல்லது வாகனங்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தாததால் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் போக, நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 50 மலேசிய கார்கள் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.