பாசிர் பாஞ்சாங் இறக்குமதி ஆய்வு நிலையத்தில் கொள் கலன் ஒன்றில் இருந்த 12.9 டன் எடை கொண்ட பெங்கொலின் எனும் ஒரு வகை எறும்புத்தின்னி விலங்கின் செதில்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட செதில்களின் விலை $52.3 மில்லியன் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை இவ்வளவு பெங் கொலின் செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செதில்கள் நைஜீரியா விலிருந்து வந்துள்ளன. சிங்கப் பூரிலிருந்து வியட்னாமுக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட இருந்த இந்தச் செதில்களை சிங்கப்பூர் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். உறைய வைத்த மாட்டிறைச்சி யுடன் இந்தப் பெங்கொலின் செதில்கள் வைக்கப்பட் டிருந்தன. அவை மொத்தம் 230 சாக்குப்பைகளில் வைக் கப்பட்டிருந்தன. இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டில் சீனாவில் பறிமுதல் செய்யப்பட்ட பெங்கொலின் செதில்களே ஆகப் பெரிய பறிமுதலாகும். அப்போது 12 டன் எடை கொண்ட பெங்கொலின் செதில் கள் பறிமுதல் செய்யப்பட்டன. உலகத்திலேயே பெங்கொ லின்தான் ஆக அதிகமாகக் கடத்தப்படும் விலங்கினம். சீனப் பாரம்பரிய மருத்து வத்தில் பெங்கொலின் செதில்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்கொலின் படம்: ஏஎஃப்பி
$52 மில்லியன் பெறுமானமுள்ள 'பெங்கொலின்' செதில்கள் பறிமுதல்
1 mins read
-

