நீண்ட கழிவுப் பாதைக்கான சுரங்கப் பணிகள் துவக்கம்

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் நிலத்துக்கு அடியில் போகும் நீண்ட கழிவுப் பாதையை அமைக்க சுரங்கப் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்தக் கழிவுப் பாதைக்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கழிவுப் பாதையில் 40 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங் கங்களும் அவற்றை இணைக்கும் 60 கிலோ மீட்டர் நீளமுள்ள சாக்கடைகளும் அடங்கும்.
கழிவுப் பாதை சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் நிலத்துக்கு அடியில் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்திருக்கும்.
அதில் செல்லும் கழிவு நீரை பூமியின் ஈர்ப்புச் சக்தி நீர் மீட்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லும்.
அங்கு கொண்டு செல்லப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு நியூவாட்டராக தயாரிக்கப்படும்.
புதிய கழிவுப் பாதைக்கான பணிகள் நேற்று அதிகாரபூர்வமாக  ஜாலான் பஹாரில் உள்ள பொது பயனீட்டுக் கழகத் தளத்தில் தொடங்கியது.
அங்கு சுரங்கத்தை அமைக்க துளையிடும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த இயந்திரத்தைப் பயன் படுத்தி நிலத்துக்கு அடியில் 3.5 மீட்டர் நீளமுள்ள விட்டம் கொண்ட சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
இது ஆழ் சுரங்கக் கழிவுப் பாதை திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளாகும்.
சிங்கப்பூரில் நீர்வளம் நிலைத்திருக்க பொது பயனீட்டுக் கழகம் இந்த ஏற்பாட்டைச் செய் துள்ளது. ஆழ் சுரங்க கழிவுப் பாதை திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் வசிப்போருக் காக இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தத் திட்டத்தின் இரண்டாம்  கட்டப் பணிகளுக்கு  $6.5 பில்லியன் செலவாகும்.

 படம்: ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ் 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon