சுடச் சுடச் செய்திகள்

தேசிய பல்கலைக்கழகத்தில் சேரும் நோபெல் பரிசு வெற்றியாளர்

நோபெல் பரிசு வெற்றியாளர் பேராசிரியர் கொன்ஸ்டன்டின் நொவோசெலொவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சேரவிருக்கிறார். 

மூலப்பொருள் அறிவியல் மற்றும் பொறியியலுக்கான மதிப்புக்குரிய பேராசிரியராக அவர் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) முதல் பணியாற்றுவார். நோபெல் பரிசு பெற்ற ஒருவர் சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்வது இதுவே முதல்முறை.

“சிங்கப்பூருடன் எனக்கு நெடுநாள் உறவு உள்ளது. தேசிய பல்கலைக்கழகத்துடன் நான் பல்லாண்டுகளாக இணைந்து செயலாற்றி இருக்கிறேன்,” என்று 44 வயது பேராசிரியர் கொன்ஸ்டன்டின் நொவோசெலொவ் தெரிவித்தார். 

பெளதிகம், மூலப்பொருள் விஞ்ஞானம் ஆகியவற்றின் ஆய்வுக்கான வலுவான அடித்தளம் சிங்கப்பூரில் உள்ளதால் இங்கு தங்க முடிவு செய்திருப்பதாக அவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார். “புதிய யோசனைகளைப் பெறுவதற்காக நான் புதிய தொடக்கத்தைப் பெற விரும்பினேன்,” என்றும் அவர் கூறினார்.

“சிங்கப்பூரின் செயலாற்றல் மக்கள் நினைப்பதைவிட மிகப் பெரிது,” என்றார் பேராசிரியர் நொவோசெல்வோ. 

2010ஆம் ஆண்டு, கிரஃபீன் என்ற மூலப்பொருள் தொடர்பான சாதனைக்காகப் பேராசிரியர் நொவோசெலொவ் நோபெல் பரிசினைப் பெற்றார்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon