தீர்க்கப்படாத எல்லா விவகாரங்கள் பற்றியும் சிங்கப்பூர்-மலேசியா அடுத்த வாரம் விவாதம்

தீர்க்கப்படாத எல்லா விவகாரங்கள் பற்றியும் சிங்கப்பூர்-மலேசியா அடுத்த வாரம் விவாதம்

2 mins read

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் முடிவு காணப்படாமல் உள்ள அனைத்து விவகாரங்கள் பற்றியும் இரு நாட்டுத் தலை வர்களின் சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவுக்கும் இடையி லான வருடாந்திர சந்திப்பு வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மலேசிய நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் நடைபெற உள் ளது. இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட இருக்கும் அம் சங்கள் குறித்து டாக்டர் மகாதீரி டம் நேற்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், "தண்ணீர்ப் பிரச்சினை, ஆகாய வெளி சர்ச்சை உள்ளிட்ட முடிவு காணப்படாத விவகாரங்கள் அனைத்தும் விவாதிக்கப்படும்," என்றார். துவாஸ் அருகேயுள்ள கடல் எல்லையில் கடந்த அக்டோபரில் மலேசியா தனது ஜோகூர் பாரு துறைமுக எல்லை வரம்பை தன்னிச்சையாக விரிவுபடுத் தியது. அந்த நீட்டிப்பு சிங்கப்பூரின் கடல் எல்லையை ஆக்கிரமித்து இருப்பதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் அதுகுறித்த கருத்துகளை வெளி யிட்டு வந்தன. அதேநேரம் சிங்கப்பூரும் தனது கடல் எல்லைக்குள் துறை முக எல்லையை விரிவாக்கியது. இதற்கிடையே, துறைமுக எல்லை விவகாரத்திலும் இரு மலேசிய கப்பல்கள் துவாஸ் கடல் நீரில் நங்கூரமிட்டு இருக் கும் பிரச்சினையிலும் இருதரப் பிலும் தற்காலிகமாக அமைதி காக்க கடந்த மாதம் சிங்கப்பூரும் மலேசியாவும் ஒப்புக்கொண்டன. தென்ஜோகூரின் ஆகாய வெளியைப் பயன்படுத்தும் உரி மையை மீட்டுக்கொள்ளப்போவ தாக கடந்த ஆண்டு மலேசியா அறிவித்திருந்தது. இது குறித் தும் திங்கட்கிழமை தொடங்கும் ஒன்பதாவது சிங்கப்பூர்-மலேசிய தலைவர்கள் கூட்டத்தில் விவா திக்கப்பட இருப்பதாக டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இரு தலைவர் களுக்கு இடையிலான முதல் ஓய்வு தள சந்திப்பு இது.