காவலரின் எச்சரிக்கையைப் புறக்கணித்த சில நிமிடங்களில் பாலியல் சேவை இணைய மோசடியில் சிக்கிய ஆடவர்

பாலியல் சேவைகளுக்காக பணம் செலுத்தும்படி கோரும் இணைய மோசடிகள் பற்றி போலிசார் கொடுத்த எச்சரிக்கை துண்டு பிரசுரத்தைப் புறக்கணித்த சில நிமிடங்களில் அத்தகைய மோசடி யில் சிக்கினார் திரு டான், 27.
கடந்த மாதம் 12ஆம் தேதி இணையத்தில் விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பாலியல் சேவைகள் வழங்கு வதாகக் கூறப்படும் விளம்பரத்தை லோகான்டோ எனும் இணையப் பக்கத்தில் அவர் பார்த்தார்.
'விசாட்' எனும் தொலைத் தொடர்புச் செயலி மூலம் அந்தப் 'பெண்'ணைத் தொடர்பு கொண்ட தாக தி நியூ பேப்பருக்கு நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் தெரிவித்தார் கட்டுமானத் துறை யில் பணிபுரியும் டான். இந்த பேட்டி சிங்கப்பூர் போலிஸ் படையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாலியல் விளம்பரம் செய்த அந்தப் பெண், சிங்கப்பூரில் கல்வி பயின்று வருவதாகவும் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக பகுதி நேர பாலியல் தொழில் செய்வதாகவும் தெரிவித்ததாக திரு டான் கூறினார்.
'விசாட்' வழியாக தொடர்பு கொண்டதை அடுத்து அந்தப் பெண்ணை ஹவ்காங்கில் அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு சந்திக்க ஏற்பாடானது. அந்த இடத்துக்கு திரு டான் சென்றபோது, அங் கிருந்த இரண்டு போலிசார், பாலி யல் சேவை தொடர்பான இணைய மோசடி குறித்து எச்சரிக்கும் துண்டுப் பிரசுரத்தை வழங்கினர். ஆனால், திரு டான் அவற்றைப் புறக்கணித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!