பண மோசடி: 73 பேரிடம் விசாரணை

பண மோசடி: 73 பேரிடம் விசாரணை

1 mins read

மொத்தம் $107,000 மோசடி செய்யப்பட்ட சந்தேகத்தின் பேரில் 73 பேர் போலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். பெரும்பாலும் மின் வர்த்தகம், பண மோசடி தொடர்பிலான அந்த 188 வழக்குகளின் தொடர்பில் விசாரிக்கப்படுவோரில் 15க்கும் 66க்கும் இடைப்பட்ட வயதையுடைய 45 ஆடவர், 28 பெண்கள் உள்ளனர். மோசடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். மோசடியில் சிக்குவதைத் தடுக்க, யாருக்கும் முன்பணம் கொடுக்க வேண்டாம் என்றும் உங்களுடைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர். மோசடி பற்றிய மேல் விவரங்களுக்கு www.scamalert.sg என்ற இணையப்பக்கத்தையோ அல்லது 1800-722-6688 என்ற நேரடி தொலைபேசி எண்ணையோ நாடலாம். மோசடி தொடர்பான தகவல்கள் இருந்தால் போலிசாரின் இணையப்பக்கம், நேரடி தொலைபேசி எண் ஆகியவை மூலம் தெரிவிக்கலாம்.