துப்பாக்கி வைத்திருந்ததாக  63 வயது ஆடவர் கைது

காற்றின் அழுத்தத்தால் செயல்படும் துப்பாக்கியை வைத்திருந்ததற்காக 63 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42ல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றின் உரிமையாளர் அவரது வீட்டின் படுக்கையறை, கழிவறை ஆகியவற்றின் சன்னல்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் கீறல்கள் இருந்ததைக் கண்டார். அவரது வீட்டுக்குச் சென்ற காவல் அதிகாரிகள் உலோக ரவைக்குண்டு ஒன்றைக் கண்டுபிடித்தனர். சுமார் ஆறு மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆடவரின் அடையாளம் உறுதிப்படுத்தப் பட்டது. காற்றின் அழுத்தத்தால் செயல்படக்கூடிய நாட்டு துப்பாக்கிகள் நான்கு, உலோக ரவைக்குண்டுகள், அந்த துப்பாக்கிகளின் வடிவமைப்பு வரைபடங்களைக் கொண்ட இரண்டு நோட்டுப்புத்தகங்கள், ஓர் இயந்திரவியல் கவண், அந்தத் துப்பாக்கிகளைச் செய்யப் பயன்படுத்திய பொருட்கள், உபகரணத் தொகுப்பு முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கியை சோதனை செய்வதற்காக துப்பாக்கியில் உலோக ரவைக்குண்டை வைத்து அந்த ஆடவர் சுட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon