இரண்டாவது நாளாக கனமழை, பலத்து காற்று வீசியதால் பழைய ஏர்போர்ட் ரோட்டில் நேற்று முன்தினம் மற்றொரு மரம் வேரோடு சாய்ந்தது. பைன் குளோசில் புளோக் 11Aக்கு அருகில் மாலை 4.30 மணியளவில் அந்த மரம் சாய்ந்ததாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அந்த மரம் சுமார் 4 மாடி அளவுக்கு உயரமானது. அந்தப் பகுதியில் 10 மாடி அளவுக்கு உயரமான மூன்று மரங்கள் இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறினர். அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற மரங்களின் சுகாதாரம் பற்றி தோட்டக்கலை நிபுணர்கள் ஆய்வு செய்வதாக மரின் பரேட் நகர மன்றம் குறிப்பிட்டது.
பழைய ஏர்போர்ட் ரோட்டில் மீண்டும் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது
1 mins read

