வேலையிட மரணங்கள், காயங்கள் பற்றி இணையத்தில் தகவல் வெளியீடு

வேலையிட மரணங்கள், காயங்கள் பற்றி இணையத்தில் தகவல் வெளியீடு

1 mins read
725f617f-2b29-420d-8abc-7414d4acf469
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தில் உலக அளவில் சிங்கப்பூர் முதன்மை பெறுவதை நோக்கமாகக் கொண்ட முத்தரப்புக் குழுவின் உத்திபூர்வ பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. படம்: திமத்தி டேவிட் -

நிறுவனங்களின் வேலையிட மரணங்கள், பெரிய காயங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. தவறு செய்யும் நிறுவனங்களுக்கு இது பாதிப்பாக அமையும். அடுத்த ஈராண்டுகளுக்குள் தயாராக இருக்கும் இந்த இணையப் பக்கத்தின் தக வல்களைப் பயன்படுத்தி சொத்து மேம்பாட்டாளர்கள், ஊழியர்கள் போன்றவர்கள் நிறுவனங்களை ஒப்புநோக்க இயலும். வேலையிட காயங்களுக்கு காப்புறுதி நிறுவனங்களின் இழப் பீடு பற்றிய தகவல்களை மனிதவள அமைச்சும் பகிர்ந்துகொள்ளும். அதன் மூலம், நிறுவனங்களின் பாதுகாப்பு விவரங்களுக்கேற்ப காப்புறுதிக் கட்டணங்களை சரிப் படுத்திக்கொள்ள முடியும். வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார (டபிள்யூஎஸ்எச்) நடை முறைகளில் அனைத்துலக அளவில் முதன்மை பெறுவதற்கு சிங்கப்பூருக்கு உதவ 10 ஆண்டு உத்திகளை உருவாக்க அமைக் கப்பட்ட அரசாங்கம், முதலாளி கள், தொழிற்சங்கங்கள் ஆகிய வற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்பு குழுவின் பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்டன. 'டபிள்யூஎஸ்எச் 2028 முத்தரப்பு உத்திகள் குழு' என அழைக்கப் படும் அந்தக் குழு, கடந்த திங்கட்கிழமை அதன் பரிந்துரை களை அரசாங்கத்துக்குச் சமர்ப் பித்தது. அவற்றை அரசாங்கம் கடந்த புதன்கிழமை ஏற்றுக் கொண்டது.