ஆகாயவெளி சர்ச்சை தொடர்பில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்ட தைத் தொடர்ந்து சிங்கப்பூருக் கான ஃபயர்ஃப்ளை விமானச் சேவை விரைவில் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருதரப் பிலும் மேற்கொள்ளப்பட்ட நான்கு மாத இடைநிறுத்தத்திற்குப் பின் னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து இம் மாதம் 22ஆம் தேதியுடன் தொடங் கும் வாரத்தில் ஃபயர்ஃப்ளை விமானங்கள் சிங்கப்பூருக்கு வந்து செல்லும். சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் மலேசிய போக்குவரத்து அமைச் சர் ஆண்டனி லோக்கும் கூட்டாக ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்தனர். "இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் கருதி சிலேத்தார் விமான நிலையத்தின் ஐஎல்எஸ் என்னும் புதிய தரையிறங்கும் நடைமுறையை சிங்கப்பூர் திரும்பப் பெற்றுக்கொள்ளும் அதேபோல தென்ஜோகூரின் பாசிர் கூடாங்கில் நிரந்தரக் கட்டுப் பாட்டுப் பகுதி என்பதை மலேசியா காலவரம்பின்றி நிறுத்தி வைக்கும்," என்று கூட்டறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டை இரு நாட்டு விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணிக்கு நடப்புக்குக் கொண்டு வந்ததாக அமைச்சர்கள் கூறினர். உடன்பாட்டைத் தொடர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தா ளிடம் பேசிய ஃபயர்ஃப்ளை பேச் சாளர், விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது பற்றி இருநாட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறினார்.
சிங்கப்பூர்-மலேசியா ஆகாயவெளி உடன்பாடு
1 mins read

