கட்டடத்தின் முக்கிய வெளி வாயில் மூடியிருந்தது தொடர் பில் ஒரு பாதுகாப்பு மேலதி காரியை ஆடவர் ஒருவர் தாக் கிய விவகாரத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். 60 வயது திரு ஆன்ட்ரு லிம், கடந்த வியாழனன்று 'ரோக்ஸி ஸ்குவேர்' என்ற இடத்தில் தாக்கப்பட்டதில் அவருக்குக் கழுத்து சுளுக்கும் கண் வீக் கமும் ஏற்பட்டன. அத்துடன் அவரின் மூக்குக் கண்ணாடியும் சேதமடைந்த தாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் 'ரீகல் செக்கியூரிட்டி' என்ற நிறுவனம் திரு லிம்மைத் தாக்கிய நபருக்கு எதிராகச் சட்ட நட வடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. சம்பவம் தொடர் பில் திரு லிம், தம்மைத் தாக் கியவரிடம் கட்டடத்தில் வேறு பல வெளிவாயில்கள் இருப்ப தாக கூற முயன்றதாகவும் ஆனால் தம்மைத் தாக்கியவர் அதைக் கேட்கத் தயாராக இல்லை என்றும் விளக்கினார்.
பாதுகாப்பு மேலதிகாரி தாக்கப்பட்டது தொடர்பில் போலிஸ் விசாரணை
1 mins read

