300 ஓட்டுநர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு

300 ஓட்டுநர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு

1 mins read

புதிய தனியார் வாடகை கார் நிறுவனமான 'ஃபாஸ்ட்கோ', சுமார் 300 ஓட்டுநர்களின் தனிப் பட்ட மின்னஞ்சல் முகவரிகளைத் தவறாக வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. வியட்னாமிய நிறுவனமான ஃபாஸ்ட்கோ, இம்மாதம் 1ஆம் தேதி ஓட்டுநர் பதிவைத் தொடங் கியது. அதன் தொடர்பில் தனது நிறுவனத்தில் ஓட்டுநர்களாக சேர விரும்பியவர்களுக்கு அது மின் னஞ்சல் அனுப்பியது. குறிப்பிட்ட ஓட்டுநர் ஒரு வருக்கு அனுப்ப வேண்டிய மின் னஞ்சல் மற்றவர்களுக்கும் சேர்த்து அனுப்பப்பட்டதால் மின் னஞ்சலைப் பெற்றவர்கள் மற் றவர்களின் மின்னஞ்சல் முகவரி களையும் காண முடிந்தது. மாறாக, அந்த நிறுவனம் 'பிசிசி' எனும் தெரிவைப் பயன் படுத்தியிருக்க வேண்டும். அப் போதுதான் இந்த மின்னஞ்சலைப் பெற்ற மற்ற ஓட்டுநர்களின் மின் னஞ்சல் முகவரிகள் மறைக்கப் பட்டிருக்கும். "இந்த விவகாரத்திற்காக ஃபாஸ்ட்கோ குழு உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது. எங்களது ஓட்டுநர் பங்காளிகள் எதிர்காலத்தில் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பர் என நம்புகிறோம்.