கிட்டத்தட்ட 20 பேர் சம்பந்தப்பட்ட அடிதடி சண்டை கேலாங் பகுதி யில் நடந்ததன் தொடர்பில் போலிஸ் விசாரணை மேற் கொண்டுள்ளது. இரு தெருக்கள் தள்ளி நடந்த வேறொரு அடிதடி சம்பவத்தை அடுத்து இந்த அடிதடி சம்பவம் அதே வட்டாரத்தில் வியாழக் கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் நடந்தது. இதன் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர் போலிசார். சண்டை எதனால் மூண்டது என்ற காரணம் இன்னும் அறியப் படவில்லை. கேலாங் சாலைக்கு இட்டுச் செல்லும் லோரோங் 27ஏ, 26 ஆகிய பகுதிகளின் அருகே அமைந்துள்ள பாதசாரிகள் கடக் குமிடத்தில் கும்பலின் சண்டை இடம்பெற்றது. கடந்த சில தினங்களாக சண் டையைச் சித்திரிக்கும் காணொளிகள் சமூக வலைத் தளங்களில் வலம் வந்த வண் ணமுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கும்பல் ஒருவரை யொருவர் அடாவடியாக அடித்துக் கொண்டும் தள்ளிக்கொண்டும் இருந்தனர். 20 வினாடிக்கு நீடிக்கும் அக்காணொளியில் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கூச்சல் சத்தமாக இருந்தது. ஆனால் எந்த மொழியில் கத் துகிறார்கள் என்றோ என்ன கூறப்படுகிறது என்றோ தெளி வாக இல்லை. இச்சண்டையால் யாராவது காயமடைந்தனரா என்பது குறித் தும் தகவல்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, கூறப்பட்ட இடத்திலும் நேரத்திலும் சம்பவம் நடந்ததற்கென எந்த ஒரு அழைப் பும் வரவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறி உள்ளது. கும்பலின் சண்டை நடப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்தான் கிட்டத்தட்ட 100 மீட்டர் தொலை வில் உள்ள ஒரு காப்பிக்கடையில் இரு ஆடவர்களுக்கிடையே சண்டை மூண்டது. 51, 53 வயதுகளுடைய இருவரிடையே நடந்த மோதலில் ஒருவருக்குத் தலையில் வெட்டுக் காயமும் இன்னொருவருக்கு வலது காதிலிருந்து கன்னம் வரை முகத்தில் ஆழமான வெட் டுக்காயமும் ஏற்பட்டன.
கேலாங்கில் கும்பல் அடிதடி சண்டை; போலிஸ் விசாரணை
2 mins read

