தோட்டத்திலிருந்து தூதரகம் வரையிலான கேசவபாணியின் வாழ்க்கைப் பயணம்

தோட்டத்திலிருந்து தூதரகம் வரையிலான கேசவபாணியின் வாழ்க்கைப் பயணம்

2 mins read
df39d256-eaa5-4b78-9a13-ded6881d9ce2
முன்னாள் அரசதந்திரி கே. கேசவபாணியின் (வலது) சுயசரிதை நூலை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (நடுவில்) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். உடன் இருப்பவர்  திரு கேசவபாணியுடன் நூலை எழுதிய இணை ஆசிரியர் திருவாட்டி அனிதா தேவி பிள்ளை.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவு எந்த நிலை யில் இருந்தது என்பதை 1997ஆம் ஆண்டில் அங்கு மலேசியாவுக்கான சிங்கப்பூரின் தூதராகப் பொறுப் பேற்க சென்ற முதல் நாளிலேயே பழுத்த அரசதந்திரியான திரு கே. கேசவபாணி நன்கு புரிந்து கொண்டார். சுபாங் விமான நிலையத்திலி ருந்து கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரின் அதிகாரத்துவ இல்லத்துக்குச் செல்லும் வழியில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தமது காருக்கு அருகில் வந்து திரு கேசவபாணியை நோக்கி ஆபாசமான சைகையைக் காட்டி விட்டு சென்றார். "இரு நாடுகளுக்கிடையே உறவு எந்தளவுக்கு மோசமாகி இருந்தது என்பதை இந்தச் சம் பவம் தெளிவாக எடுத்துரைத்தது," என்று திரு பாணி என்று சுருக்க மாக அழைக்கப்படும் அவர் தமது சுயசரிதை நூலில் எழுதியிருந்தார். 1997ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மலேசியா வுக்கான சிங்கப்பூர் தூதராகப் பணியாற்றிய திரு பாணி, அந்த அனுபவங்களைத் தாம் இணைந்து எழுதிய 'Estate to Embassy, Memories of An Ambassador' அதாவது 'தோட்டம் முதல் தூத ரகம் வரை, தூதர் ஒருவரின் நினைவுகள்' எனும் தலைப்பிலான நூலில் குறிப்பிட்டிருந்தார். அந்த நூலை 82 வயது திரு பாணியுடன் சேர்ந்து எழுதியிருந் தார் மொழி வல்லுநர் திருவாட்டி அனிதா தேவி பிள்ளை. பிஜிபி அரங்கில் கடந்த வெள் ளிக்கிழமை நூலை வெளியிட்டார் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். மேலும் சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கம், சிங்கப்பூர் இந்தியர் சங் கம், அனைத்து சமய மன்றம் ஆகியவற்றில் தாம் ஆற்றி வரும் சமூகப் பணிகள் பற்றியும் திரு பாணி தமது நூலில் குறிப்பிட்டி ருக்கிறார். வெளியுறவு அமைச்சில் அவர் ஆற்றிய பணியில், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாட்டுக்கான சிங் கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதி, இத் தாலிக்கும் துருக்கிக்கும் ஒரே சம யத்தில் தூதர், ஜோர்தானுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பொறுப்பு களை வகித்தவர் திரு பாணி. ஆனால், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராக திரு பாணி செயலாற்றிய காலத்தில்தான் அவ ரது சிறந்த அரசதந்திரம் வெளிப் பட்டது என்று அமைச்சர் விழாவில் பேசியபோது குறிப்பிட்டார். "மிகுந்த சவால்மிக்க பணிக ளுக்கு நாம் தலைசிறந்த அரச தந்திரிகளை அனுப்புவது என்பது எவருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. திரு கேசவபாணி எப்படிப் பட்ட சவால்மிக்க பணியாக இருந் தாலும் அமைதியாக இருந்து அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்," என்றும் டாக்டர் விவி யன் அவருக்குப் புகழாரம் சூட்டி னார்.