மின் விநியோகப்பெட்டியில் கனரகலாரி மோதியதால் 21 வீடுகளில் மின்தடை

மின் விநியோகப்பெட்டியில் கனரகலாரி மோதியதால் 21 வீடுகளில் மின்தடை

1 mins read
62b188e7-218d-4df1-b3f4-f59b4b81404f
-

சிராங்கூன் கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் சிமெண்ட் லாரி ஒன்று மின் விநியோகப் பெட்டியில் மோதியதால், அங்குள்ள 21 வீடுகளில் மீன்தடை ஏற்பட்டது. எண் 67 பிளான்ஃபோர்ட் டிரைவ் எனும் முகவரியில் நடந்த இந்த விபத்து குறித்து போலிசுக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் சனிக்கிழமை மாலை 4.05க்குத் தகவல் கிடைத்தது. 43 வயதான அந்த லாரியின் ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார் என போலிஸ் தெரிவித்தது. விபத்துக்குள்ளான லாரி அங்கிருந்த மரத்துக்கும் வீட்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர் (படம்). இரவு 7 மணியளவில் இழுவை வாகன ஊழியர்கள் சிலர் லாரியை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த விபத்தில் லாரி மின் விநியோகப் பெட்டியில் மோதியதால் வீடுகளில் மாலை 4.19 மணிக்கு மின்தடை ஏற்பட்டது என்றும் தனது ஊழியர்கள் மின்தடையைச் சரி செய்ததால், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாலை 5.20 மணி முதல் படிப்படியாக மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது என்றும் சிங்கப்பூர் பவர் குழுமம் தெரிவித்தது.