சிங்கப்பூரின் வரலாற்றைக் கட்டிக்காக்கும் கடப்பாடு

சிங்கப்பூரின் வரலாற்றைக் கட்டிக்காக்கும் கடப்பாடு

1 mins read
21d44a91-a492-430b-a9bf-c30383dd34a8
புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஆங்கிலோ-சீனப் பள்ளியின் காலப்பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட அப்பள்ளி யின் ஆண்டு இதழை தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் வரலாற்றை கேனிங் ரைசின் சுவர்களுக்கு அப்பால் கொண்டுசெல்ல தேசிய ஆவணக் காப்பகம் கடப்பாடு கொண்டுள் ளது என்று கிட்டத்தட்ட 18 மாத மறுசீரமைப்புக்குப் பின்னர் நேற்றுத் திறக்கப்பட்ட ஆவணக் காப்பத் தின் செயல்பாடுகளைப் பாராட்டி உள்ளார் தொடர்பு, தகவல் அமைச் சர் எஸ். ஈஸ்வரன். இவ்வாண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது ஆவணக் காப் பகம். எண் 1, கேனிஸ் ரைஸ் சாலையில் காப்பகம் அமைந்துள்ள கட்டடம் முன்பு ஆங்கிலோ-சீன தொடக்கப்பள்ளியாக இருந்தது. பழமைப் பாதுகாப்புக் கட்டடமான அதன் வடிவமைப்பு மாறாமல் புதுப் பிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆய்வாளர்களும் வரலாற்று ஆர்வலர்களும் வீட்டில் அல்லது அலுவலகங்களில் இருந்தே பொத் தான்களை அழுத்தி, ஆவணங் களைப் பெறலாம். ஆய்வாளர் களுக்கு வசதியான புதிய 'மைக் ரோஃபிலிம்' இயந்திரங்களுடன் ஆய்வுச் சூழலுடன் நேரடியாக ஆவணங்களைப் பார்வை யிடும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று நேற்று புதுப்பிக்கப்பட்ட காப்பகத்தைத் திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் குறிப் பிட்டார். தேசிய நூலக வாரியத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆவணக் காப்பகம், தேசிய, வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த ஆவணங்களின் பாதுகாப்பகமாகும். 200,000க்கும் அதிகமான ஒலிப்பதிவுகள், ஐந்து மில்லியனுக் கும் மேற்பட்ட புகைப்படங்கள், கிட்டத்தட்ட 44,000 தனியார் ஆவணங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் போன்றவை இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.