ஈராண்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக தாம்சன் சமூக மன்றம் மூடல்

ஈராண்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக தாம்சன் சமூக மன்றம் மூடல்

1 mins read

மேம்பாட்டுப் பணிகளுக்காக இரண்டு ஆண்டுகள் மூடப்பட விருக்கும் தாம்சன் சமூக மன்றம் கடந்த 35 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றி வந்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் சமூக மன்றம் தன் கதவுகளை மூடும். வரும் 2021ஆம் ஆண்டில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்படும்போது அதன் வளாகம் 6,000 சதுர மீட்டர் பரப் பளவில் அமைந்திருக்கும். சமையல் அரங்கு, பெரிய நடன அறைகள், கூரையுடன் கூடிய கூடைப்பந்துக் கூடம் ஆகியவை புதிய வசதிகளில் அடங்கும். அருகில் உள்ள ‌ஷுன்ஃபூ சந்தையிலிருந்து சமூக மன்றத்துக்கு வசதியாக வருவதற்கு ஏதுவாக அவற்றுக்கிடையே ஒரு பாலம் அமைக்கப்படும். தாம்சன் சமூக மன்றத்தின் செயல்பாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பீஷான் நார்த் சமூக மன்றத்தில் இடம்பெறும். வகுப்புகளும் இதர நடவடிக்கைகளும் அருகில் உள்ள வசிப்போர் குழுக்களின் நிலையங்களில் நடத்தப் படும். நேற்று முன்தினம் தாம்சன் சமூக மன்றத்தில் நடைபெற்ற புதிய மன்றத்தின் வசதிகளை விளக்கும் நிகழ்ச்சிக்கு வந்த மனிதவள அமைச்சரும் பீஷான் நார்த் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான ஜோசஃபின் டியோ, "புத்துயிர் பெறும் தாம்சன் சமூக மன்றம் மக்கள் இளைப்பாறுவதற்கு, நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு, கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கு விரும்பி வரும் இடமாக அமையும்," என்றார்.