2020 ஆண்டின் பொது விடுமுறை நாட்கள்

2020ஆம் ஆண்டில் ஏழு நீண்ட வாரயிறுதி விடுமுறைகள் இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளின் எண்ணிக்கையைவிட அடுத்தாண்டில் கூடுதலாக மூன்று வாரயிறுதி விடுமுறைகள் இருக்கும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அடுத்த ஆண்டின் 11 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலும் மூன்று நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இடம்பெறும் என்று மனிதவள அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி புனித வெள்ளி, மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம், ஜூலை 31ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள், டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் ஆகிய விடுமுறைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

ஜனவரி 26ஆம் தேதி சீனப் புத்தாண்டு, மே 24ஆம் தேதி நோன்புப் பெருநாள், ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும்.

2020ஆம் ஆண்டின் பொது விடுமுறைகளின் முழு பட்டியலை மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

பொது விடுமுறையில் வேலை செய்யவேண்டிய ஊழியர்களுக்கு ஒரு நாள் அடிப்படை விகித சம்பளம் தரப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது. அதற்கு மாறாக அந்த ஊழியருக்கு மற்றொரு நாள் விடுப்பு கொடுக்கலாம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon