பிரதமர் லீ சியன் லூங் கடந்த சனிக்கிழமை மாலை பூமலைக்குச் சென்றிருந்ததை காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சிங்கப்பூர் சீன செவ்விசைக்குழுவின் நிகழ்ச்சியை திரு லீ, அவரது மனைவியுடனும் பேரப்பிள்ளைகளுடனும் ரசித்துக்கொண்டிருந்ததைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன. அந்தப் படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
தாம் பூமலையில் இருந்ததைக் காட்டும் சிலப் படங்களைப் பிரதமரும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அங்கு தமது மாலைப் பொழுது இதமாகக் கழிந்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.

