கப்பல் தொழில்துறை தனது வர்த் தக மாதிரிகளை மறுவடிவமைத்து வருவதால், சிங்கப்பூரும் தனது கடல்துறை உத்திகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற 13வது சிங்கப்பூர் கடல்துறை விரிவுரை நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சான், உலகளாவிய துறைமுக மையமாகவும் அனைத்துலக கடல் துறை மையமாகவும் திகழும் சிங் கப்பூரின் நிலை, அது எவ்வாறு இத்துறையில் நிகழும் மாற்றங்க ளுக்கேற்ப தனது நிலைப்பாட்டைத் தக்க வைத்துக்கொள்கிறது என்ப தைப் பொறுத்தே அமைந்துள்ளது என்றார். அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக பதற் றங்களும் பிரெக்சிட் மற்றும் அதி கரித்துவரும் தன்னைப்பேணித் தனமும் உலகளாவிய சுற்றுச்சூழ லுக்கு பெரும் சவால்களாக அமைந்துள்ளன. பருவநிலை மாற்றத்தால், வட துருவத்தில் உறைந்துள்ள பனி உருகி வருவதால், பாரம்பரியமான சுவெஸ்-மலாக்கா கப்பல் பாதைக் குப் பதிலாக மாற்று வர்த்தக கப்பல் பாதைகள் உருவாக்கப்படும் என்பதால், வர்த்தகங்கள் வேறு பாதையை நோக்கிச் செல்லும். அதனால், இவ்வட்டாரத்தின் கடல் துறை பாதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் விளக்கினார். "இருப்பினும், உருவாகி வரும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் கப்பல் துறையின் வளர்ச்சி வாய்ப் புகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அதை நமக்குச் சாதமாக்கிக் கொள்ள வேண்டும். "இதற்கு ஒரு வழி முக்கியமான சந்தைகளுடன் இணைப்பை ஏற்ப டுத்திக்கொள்ளுதல். உதாரணத் துக்கு, ஐரோப்பிய ஒன்றியம்-சிங் கப்பூர் தடையற்ற வர்த்தக உடன் பாட்டில் நாம் அதிக கவனம் செலுத்தலாம்," என்றும் திரு சான் விவரித்தார். ஐரோப்பிய ஒன்றியம்-சிங்கப் பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு, 25 வர்த்தக உடன்பாடுகளின் மூலமும் 64 வர்த்தகப் பங்காளிகள் மூலமும் சிங்கப்பூரின் ஏற்றுமதிக ளுக்கு சிறந்த அங்கீகாரம் அளிக் கும். இதைத் தவிர, எதிர்கால தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகளை யும் நாம் ஆராயலாம் என்றார் அமைச்சர் சான்.
சான்: தனது கடல்துறை உத்திகளை சிங்கப்பூர் மறுஆய்வு செய்ய வேண்டும்
2 mins read
13வது சிங்கப்பூர் கடல்துறை விரிவுரை நிகழ்ச்சியின் கலந்துரையாடல் அங்கத்தில் பங்கேற்றார் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

