ஆரஞ்சு சாறு இயந்திரங்கள் தொடர்பான நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 28 வயது ஆடவர் ஒருவர் அத்தகைய எட்டு இயந்திரங்களிலிருந்து $2,300 பணத் தைத் திருடினார். இந்தக் குற்றங்களைப் புரிந்த லீ ஸி ஹாவ் எனும் மலேசியருக்கு நேற்று ஒன்பது வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 'ஐ-ஜுஸ்' ஆரஞ்சு சாறு இயந்திரங்களை வாடகைக்கு விடும் 'ஃபுருட்ஸ் வெண்டிங்' நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக கடந்த ஆண்டு நவம்பர் தொடக்கம் ஒரு மாதத்துக்கு லீ வேலை செய்தார். அத்தகைய இயந்திரங்களில் ஆரஞ்சுப் பழங்களை நிரப் புதல், இயந்திரத்தைச் சுத்தம் செய்தல், அதில் உள்ள பணத் தைச் சேகரித்தல் போன்றவை லீயின் அன்றாடப் பணிகள். அவர் சரிவர வேலை செய்யாததால், டிசம்பர் மாதம் 13ஆம் தேதி லீயின் பணி ஒப்பந்தத்தை நிறுவனம் ரத்து செய்தது. தங்கும் விடுதியை விட்டு கிளம்பும்போது, நிறுவனத்தின் பழச்சாறு இயந்திரங்களைத் திறக்கும் சாவிகள் தன்னிடம் இருந்ததைத் தெரிந்துகொண்டார். பின்னர் அந்தச் சாவிகளைக் கொண்டு எட்டு இயந் திரங்களிலிருந்து மொத்தம் $2,354 தொகையை லீ களவாடி னார். அந்தப் பணத்தைக் கொண்டு லீ தனது கடன்களை அடைத்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஆரஞ்சு சாறு இயந்திரத்தில் $2,300 திருடிய ஆடவருக்கு 9 வாரச் சிறை
1 mins read

