தமது 13 வயது தங்கையை அறைந்து, உதைத்து பிறகு 'கொன்றுவிடுவேன்' என்று அவரிடம் கூறிய 17 வயது இளையருக்கு நேற்று 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது. தங்கையின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு, அந்த 17 வயது இளையரின் பெயரை வெளியிட முடியாது. அவரும் தங்கையும் கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் 6ஆம் தேதி தங்கள் ஜூரோங் வெஸ்ட் வீட்டில் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். கோபமுற்ற தங்கை ஒரு கிண்ணத்தில் இருந்த சூப்பை மேசையில் தட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளையர் தங்கையை அறைந் தார். பின்னர் கீழே விழுந்த அவரை முதுகில் உதைத்தார். அதன் பிறகு, ஒரு இரும்புக் கழியை எடுத்து வந்து, "உன்னைக் கொன்று விடுவேன். உன் ரத்தத்தைப் பார்க்க விரும்புகிறேன்," என்று மிரட்டினார். பயந்துபோன தங்கை கழிவறைக்கு ஓடி, அங்கிருந்து போலிசை உதவிக்காக அழைத்தார். பிள்ளைகளின் தாயார் இளையரை அமைதிப்படுத்தினார். போலிசார் வந்து இளை யரைக் கைது செய்தனர். மாவட்ட நீதிபதி மே மெசனஸ் இளையருக்குத் தண்ட னையாக 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பை விதித் தார். இந்தக் காலத்தில் அவர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் அவர் மனநல மற்றும் உளவியல் பயிற்சிகளுக்கும் செல்ல வேண்டும்.
தங்கையை மிரட்டிய இளையருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு
1 mins read

