சுடச் சுடச் செய்திகள்

கேலாங்கில் கலவரம்; பத்து பேர் கைது

கேலாங் வட்டாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் பத்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்களைக் கைது செய்தனர்.

சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

கேலாங் ரோட்டுக்கு வளைந்து செல்லும் லோரோங் 27ஏ-க்கும் 26க்கும் அருகிலுள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் அந்த மோதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் கிட்டத்தட்ட 20 பேர் குழுமியிருந்ததைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. அவர்கள் கூச்சலிடும் சத்தம் காணொளியில் கேட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon