சுடச் சுடச் செய்திகள்

கேலாங் கைகலப்பு; 10 பேர் கைது

கேலாங் பகுதியில் கிட்டத்தட்ட 20 பேர் சம்பந்தப்பட்ட கைகலப்பு நடந்ததன் தொடர்பில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ற வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் நடந்த இச்சண்டை குறித்துத் தகவல் கிடைத்திருந்ததை நேற்று முன்தினம் போலிசார் உறுதிசெய்தனர். குற்றப் புலனாய்வுத் துறையையும் பிடோக் போலிஸ் பிரிவையும் சேர்ந்த அதிகாரிகள் பத்து ஆடவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். கேலாங் சாலைக்கு இட்டுச் செல்லும் லோரோங் 27ஏ, 26 ஆகிய பகுதிகளின் அருகே அமைந்துள்ள பாதசாரிகள் கடக்குமிடத்தில் கும்பலைச் சேர்ந்தோர் சண்டை போட் டனர். சண்டையைச் சித்திரிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கும்பல் ஒருவரையொருவர் அடாவடியாக அடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் இருந்தனர். சண்டை எதனால் மூண்டது என்ற காரணம் இன்னும் அறியப்படவில்லை. போலிஸ் விசாரணை தொடர்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon