அதிகாரியின் பிடியிலிருந்து தப்ப முயன்றவர் கால்வாயில் விழுந்தார்

அதிகாரியின் பிடியிலிருந்து தப்ப முயன்றவர் கால்வாயில் விழுந்தார்

1 mins read

பதிவு செய்யாத மின்சக்தி மிதிவண்டியை ஓட்டிய ஆடவர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க வேகமாகச் சென்றதில் கால்வாயில் விழுந்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்ட ஷேக் ஃபடில், 27, தன் சாதனத்தைக் கவனக்குறைவாக ஓட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதற்கு நேற்று அவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று நில போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் பைனியர் ரோடு நார்த் பகுதியில் சோதனையிட முயன்றபோது ஃபடில் அங்கிருந்து தப்பிக்க தன் வண்டியை வேகமாகச் செலுத்தினார். அப்போது வண்டி சாலை ஓரம் இருந்த தடுப்பில் மோதியதில் ஃபடில் வண்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டு கால்வாயில் விழுந்தார். அவருக்குத் தலையில் காயங்கள் ஏற்பட்டு உணர்விழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிகாரி களை தன்னைப் பின்தொடர்ந்து துரத்த காரணமாக இருந்ததுடன் கட்டுப்பாட்டை இழக்கும் அளவுக்குத் தன் சாதனத்தை மிக வேகமாக ஃபடில் ஓட்டியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.