பெண்ணின் முகத்தில் குத்தி எலும்பு முறிவு ஏற்படுத்தியவர் மீது குற்றச்சாட்டு

பெண்ணின் முகத்தில் குத்தி எலும்பு முறிவு ஏற்படுத்தியவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

ஒரு பெண்ணை மின்தூக்கிக்குள் பின்தொடர்ந்து சென்று அவரை முகத்தில் சரமாரியாகக் குத்தியதுடன் கழுத்தை நெறித்துத் தாக்குதல் நடத்திய ரி‌ஷி கிரிஸ்டஃபர், 20, நேற்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது, 53 வயது மாதைச் சென்ற அக்டோபர் மாதத்தில் ரி‌ஷி தாக்கினார். திருட்டு, நம்பிக்கை மோசடி, போதைப்பொருள் வைத்திருந்தது, அதை உட்கொண்டது ஆகிய குற்றங்களையும் ரி‌ஷி ஒப்புக்கொண்டார். மாதின் கைப்பையை இழுத்த வண்ணம் அவரின் முகத்தில் பலமுறை ரி‌ஷி குத்தினார். முகத்தின் பல பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்ட நிலையில் தாக்கப்பட்ட மாது இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இதுவரை இருமுறை மனநல சிகிச்சைகளுக்குச் சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ரி‌ஷி, வாட்டர்வே பாயிண்ட் கடைத்தொகுதியில் துணிமணிகள், காலணிகள் ஆகியவற்றைத் திருடிய அதே நாளன்று மாதைத் தாக்கினார். சம்பவத்திற்கு நான்கு மணி நேரம் கழித்து போலிசார் ரி‌ஷியைக் கைது செய்தனர்.