சிங்கப்பூரில் குறைந்தது மூவருக்கு 'கேன்டிடா ஒரிஸ்' (சி.ஒரிஸ்) என்ற உயிர்க்கொல்லிக் கிருமி தொற்றியதாகத் தகவல் வெளி வந்துள்ளது. இக்கிருமி, மருந்து எதிர்ப்புத் தன்மையுடைய ஒருவகை பூஞ்சை. இந்நோய் உலகில் பரவி வரும் நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இதற்காக மூவர் சிகிச்சை பெற்றதாக மருத் துவமனை தெரிவித்தது. மூவரில் ஒருவர் குணமடைந்தார். மற் றொருவர் மருத்துவ ஆலோசனை யைப் புறக்கணித்து சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். மூன் றாமவர் அந்நோயால் உயிரிழந்தார். 'சி.ஒரிஸ்' நோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, சிங்கப்பூர் பொது மருத்துவமனை மூவரையும் உடனே தனிமைப் படுத்தியது. இந்த நோய் தொற்றிய முதல் சிங்கப்பூரர் ஒரு 52 வயது பெண். 2012ஆம் ஆண்டு இந்தியா வில் சாலை விபத்துக்குள்ளாகி அவருக்கு எலும்பு முறிவு காயங் கள் ஏற்பட்டன. அந்தக் காயங் களில் 'சி.ஒரிஸ்' கிருமி இருந் ததாக சிங்கப்பூரில் செய்யப்பட்ட சோதனைகள் வழி தெரியவந்தது. முறையாக சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
மருந்து எதிர்ப்பு கிருமியால் மூவர் பாதிப்பு
1 mins read

