வீட்டு வாசலில் மீன் தொட்டி வைத்திருக்க அனுமதி மறுப்பு

வீட்டு வாசலில் மீன் தொட்டி வைத்திருக்க அனுமதி மறுப்பு

1 mins read
00634426-bb19-4e69-9a0b-2f20a4ef7f83
வீட்டு வாசலின் படிக்கட்டுகளை 'கொய்' மீன் தொட்டியாக மாற்றிய குடியிருப்பாளர் அதைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதற்காக செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விசித்திரமான முறையில் வீட்டு வாசலின் படிக்கட்டுகளை மீன் தொட்டியாக மாற்றிய வீட்டு உரிமையாளர், அதை அகற்றாமல் அப்படியே வைத்திருக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) சமர்ப்பித்திருந்த மேல் முறையீட்டைக் கழகம் நிராகரித் துள்ளது. தெம்பனிஸ் ஸ்திரீட் 41ல் வசிக்கும் அவ்வீட்டு குடி யிருப்பாளர், தனது 'கொய்' மீன் களை வைப்பதற்காக வீட்டின் முன்வாசல் கதவுக்கு வெளியில் உள்ள படிக்கட்டுகளைப் பயன் படுத்தியிருந்தார். அங்கு நான்கு பக்கங்களிலும் கண்ணாடிச் சட் டங்களைப் பொருத்தி அதை ஒரு பெரிய மீன் தொட்டியாக மாற்றினார். இவ்வாறு செய் வதற்கு வீவகவின் அனுமதி தேவை என்று அப்போது தனக் குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆயினும், பாதுகாப்புக் கார ணங்களால் அந்தத் தொட்டியை அவர் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று வீவக இவ்வாண்டு ஜனவரி மாதம் தெரிவித்தது. "வீட்டு வாசலுக்கு வெளியில் உள்ள படிக்கட்டுகள் பொதுச் சொத்து. வீட்டு உரிமையாளர்கள் செய்ய விரும்பும் மாற்றங்கள் தங்கள் வீடுகளுக்குள் உட்பட் டிருக்கவேண்டும். அத்தகைய மாற்றங்கள் பொதுச் சொத்தில் செய்யப்படக்கூடாது," என்று வீவக கூறியது. வீவகவின் முடிவை உரிமை யாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.