பெண்களைக் கௌரவிக்க ஐந்து புதிய விருதுகள்

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்களை முறியடிக்கும் வலிமையான பெண்களைக் கௌரவிக்க வும் தொழில்முனைப்பில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் களமிறங்க ஊக்குவிக்கவும் 'இந்த ஆண்டின் சிறந்த இந்திய பெண்கள்' எனும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட இளம் சாதனையாளர், ஒற்றைப் பெற்றோராக விளங்கும் தாயாருக்கு 'ஹர்கியூலியன்' விருது, கருணையுள்ள பெண்ணுக்கு 'வுமன் வித் ஏ ஹார்ட்' விருது, சிறந்த பெண் தொழில் முனைவருக்கு 'இந்தியன் வுமன் ஆஃப் தி இயர்' விருது ஆகியவை நான்கு பிரிவுகளில் வழங்கப்படும்.
இவற்றுடன் வாழ்நாள் சாதனை யாளர் விருதும் இவ்விழாவில் வழங்கப்படும்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் 95ஆவது ஆண்டு நிறைவின் ஓர் அங்கமாக இவ்விருதுகள் இவ்வாண்டு அறி முகப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களிடமிருந்து 38 நியமன விண்ணப்பங்கள் வந்து உள்ளன. அதனைத் தொடர்ந்து நான்கு பிரிவுகளின் விருதுகளுக் கான நியமனங்களை ஐந்து நீதி பதிகள் இன்று தேர்ந்தெடுப்பர்.
அத்துடன் தமிழ் திரையுலகின் பிரபலம் கௌதமி அவர்களின் உரை, உள்ளூர் பிரபலமான குமாரின் நகைச்சுவை அங்கம், 'ஸ்டைல்மார்ட்'டின் ஆடை அலங் கார அணிவகுப்பு ஆகிய நிகழ்ச் சிகளும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 25ஆம் தேதியன்று 'தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா' ஹோட்டலில் இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ள இவ்விருது விழா நிகழ்ச்சிக்குப் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி ஆகிய வற்றின் இரண்டாம் அமைச்சரு மான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
விருதுபெற்ற பெண்கள் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என்று சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் பெண்கள் தொழில்முனைவர் கட்டமைப்பு நம்புகிறது.
பல இந்திய பெண்கள் பல்வேறு விதங்களில் விளம்பர மின்றி சமூகத்திற்கு பங்களித்து வருகிறார்கள் என குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திருமதி கோமதி ராஜரத்னம் (படம்), சிங்கப்பூர் இந் திய சமுதாயத்தின் பெண்களுடைய சாதனைகளையும் சேவையையும் அங்கீகரிக்கும் தளமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று கூறி னார். சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் பெண்கள் தொழில்முனைவர் கட்டமைப்பு வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தனி நபர் நுழைவுச்சீட்டு $200இலிருந்து தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!