பிரதமர் லீ: 1962ஆம் ஆண்டு தண்ணீர் ஒப்பந்தம் புனிதமானது

பிரதமர் லீ: 1962ஆம் ஆண்டு தண்ணீர் ஒப்பந்தம் புனிதமானது

1 mins read

சிங்கப்பூரும் மலேசியாவும் 1962ஆம் ஆண்டு செய்துகொண்ட தண்ணீர் ஒப்பந்தம் புனித மானது என்றும் இரு நாடுகளும் அதை மதித்து நடக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். "அந்த உடன்பாட்டை அடிப்படையாக வைத்து, தங்களுக்கு இடையிலான உறவு களைப் பேண இரு நாடுகளும் முடிவுசெய்தன. அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அதை மாற்றுவது என்பது கிட்டத்தட்ட சாத் தியமில்லாத ஒன்று," என பிரதமர் கூறினார். அதே நேரத்தில், 1962 தண்ணீர் ஒப்பந் தத்தின்கீழ் தண்ணீருக்கான விலையை மாற்றி நிர்ணயிக்க வேண்டிய மலேசியாவின் அரசியல் தேவையைத் தாம் அறிந்துள்ளதாக வும் திரு லீ சொன்னார். "அந்த உடன்பாட்டைப் புனிதமானதாகக் கருதும் சிங்கப்பூரின் கண்ணோட்டத்தை திரு மகாதீர் அறிவார் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பில் ஆக்ககரமான பேச்சு வார்த்தை நடத்தி, இரு தரப்புக்கும் உகந்த வழியைக் கண்டறிய முயல்வோம்," என்றும் அவர் தெரிவித்தார். தண்ணீருக்கான விலையை மறுஆய்வு செய்யும் உரிமை தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். ஆயினும், இந்த விவகாரம் குறித்து இரு நாடுகளின் தலைமைச் சட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.