லிம் சூ காங் பால் பண்ணையிலிருந்து தப்பித்த காளை மாடு

1 mins read
e0fd8438-3d40-416f-b81a-bd279da8750c
-

லிம் சூ காங் பால் பண்ணையிலிருந்து காளை மாடு ஒன்று தப்பித்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மாட்டைத் தேட சிங்கப்பூர் உணவு அமைப்பு தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தது.அந்த மாடு தனது உரிமையாளர்களிடமிருந்து ஓடி 14 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

காளை மாட்டைக் கண்டால் அதனை அணுகாமலும் தூண்டாமலும் இருக்குமாறு பொதுமக்களிடம் சிங்கப்பூர் உணவு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த மாட்டைக் கண்டால் விலங்கு தொடர்பு நிலையத்தை (9 Animal Response Centre) 1800-476-1600 என்ற எண்ணில் அழைக்கலாம்.