பிடோக் பேருந்து நிலையத்தில் தம்பதியருக்கு இடையே நிகழ்ந்த வாக்குவாதம் இறுதியில் ரத்தக் களரியில் முடிந்தது. ஆரம்பத்தில் கணவரும் மனைவியும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். வாக்குவாதம் முற்றிப்போய் மனைவி தனது கணவரை எட்டி உதைக்கத் தொடங்கினார். பதிலுக்கு அந்த ஆடவர் தனது மனைவியை அடித்தார்.
ஆத்திரத்தில் அந்தப் பெண் அருகில் இருந்த ஒப்பனை கடைக்குள் சென்று அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது கணவரை தாக்கினார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் போலிசாரும் சம்பவ இடத்திற்குக் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு சென்றனர். அவர்கள் இருவரும் இரண்டு எஸ்சிடிஎஃப் மருத்துவ வாகனங்களில் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயத்தை விளைவித்த குற்றத்தின்பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

