விமானப் பயணப் பெட்டிகளை எடைகுறைத்து காண்பிக்க லஞ்சம் பெற்றதாக வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் நால்வர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட் டது. ஸ்கூட், டைகர் ஏர்வேஸ் ஆகிய விமானங்களுக்கான பயணப் பெட்டிகளைக் கையாண்டபோது அவர்கள் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட் டது. எந்த இடத்தில் குற்றம் நிகழ்ந் தது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்காதபோதிலும் கைமாறாக அவர்கள் சிகரெட்டுகளையும் ரொக்கப் பணத்தையும் பெற்ற தாகக் கூறப்பட்டது. குற்றம் நிகழ்ந்தபோது முகம் மது ஹாரிஸ் முகம்மது அலி, 23, ஜெரிஸிம் கிருபை ராஜ் டேவிட், 35, ஆகிய இரு சிங்கப்பூரர்களும் சேட்ஸ் ஏஷியா பசிபிக் ஸ்டார் நிறுவனத்துக்காகப் பணியாற்றி னர். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அகமது என்பவரிட மிருந்து ஹாரிஸ் 66 வெள்ளி மதிப்புள்ள ஆறு சிகரெட் பாக் கெட்டுகளை லஞ்சமாகப் பெற்றார். அதேபோல ஜெரிஸிம் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் ஜூலைக் கும் இடைப்பட்ட காலத்தில் கஜேந் திரன் ரமேஷ் என்பவரிடமிருந்து அவர் 630 வெள்ளி லஞ்சமாகப் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
விமானப் பயணப்பெட்டியின் எடையை குறைத்து மதிப்பிட லஞ்சம் பெற்றதாக நான்கு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
1 mins read

