வீட்டுக்குள் புகுந்து கொள்ளை; 14 வயது இளையர் கைது

வீட்டுக்குள் புகுந்து கொள்ளை; 14 வயது இளையர் கைது

1 mins read
3bb1a46a-6791-4f1c-82a6-ef3496715498
-

வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த சந்தேகத்தின்பேரில் 14 வயது இளையர் கைது செய்யப்பட்டிருக்கிறார். புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 32லுள்ள அந்த வீட்டுக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் அத்துமீறி நுழைந்ததாகவும் அங்கிருந்து மடிக்கணினி ஒன்றைத் திருடியதாகவும் புதன்கிழமை (ஏப்ரல் 10ஆம் தேதி) போலிசாரிடம் புகார் செய்யப்பட்டது.

கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான படங்களின் துணையோடு விசாரணை நடத்திய ஜூரோங் போலிஸ் பிரிவின் அதிகாரிகள், அந்த இளையரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதே நாளில் அவரைக் கைது செய்தனர். திருடப்பட்ட மடிக்கணினியை அதிகாரிகள் மீட்டனர்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, அங்கு கொள்ளையடித்தது ஆகியவற்றின் தொடர்பில் அந்த இளையர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.