சிலேத்தார் விமான நிலையத்தில் பரிசோதனை ஓட்டத்தை நடத்திய ‘ஃபையர்பிலை’

மலேசியாவின் ‘ஃபையர்பிலை’ பயணி விமானம் சிலேத்தார் விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை தரையிறங்கி பரிசோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 

சுமார் ஒரு மணி நேரம் தரையில் இருந்த பின்னர் அந்த விமானம் பிற்பகல் 12.30 மணிக்குப் பறக்க ஆரம்பித்தது. 

சிலேத்தார் விமான நிலையத்தில் ‘ஃபையர்பிலை’ நிறுவனம் தொடங்கப்போகும் தனது சேவைக்கு முன்னதாக இந்தப் பரிசோதனை ஓட்டத்தை நடத்தியதாக சிங்கப்பூர் சிவில் விமானத் துறை ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

“ஃபையர்பிலையின் விருப்பத்தின்படி ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் மேலும் சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து வழிநடத்தும்,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

சிலேத்தார் விமான நிலையத்தில் பயண சேவைகள் ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் திங்கட்கிழமை அறிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon