$23,500 மதிப்புள்ள பொருட்களுடன் காரைத் திருடியர் கைது

$23,500 மதிப்புள்ள பொருட்களுடன் காரைத் திருடியர் கைது

1 mins read

இம்மாதம் 7ஆம் தேதி காருக்குள் இருந்த $23,500 மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்களுடன் அந்த காரையும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலிருந்து திருடிக்கொண்டு போன தாக நம்பப்படும் ஆடவர் மூன்று நாட்கள் கழித்து பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கேலாங் லோரோங் 8ல் அந்த 31 வயது ஆடவரை நேற்று முன்தினம் போலிசார் கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கார் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருடு போய்விட்டது என்று அன்று மாலை 6.55 மணிக்கு போலிசுக்குத் தகவல் கிடைத்தது. காருக்குள் $23,5000 மதிப்புள்ள பல பைகள், விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மற்றொரு கார் நிறுத்தத்தில் கார் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. தீவிர புலனாய்வுக்குப் பிறகு காரையும் அதிலுள்ள பொருட்களையும் திருடியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சில பைகளும் விலையுயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மோட்டார் வாகனத்தைத் திரு டியதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு அபராதமும் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.